www.garudabazaar.com

வெளியானது Bigg Boss அசல் கோலார் பாடியுள்ள மேரா மாதா மர்கயா பாடல்.. இந்த படத்துலயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ட்ரிபர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், மதுசூதனன் தயாரிப்பில், துவாரக் ராஜா எழுதி இயக்கியுள்ள புதிய படம் பரோல்.

Mera Madha Margaya Asal Kolar Rap Oppari Parole

Also Read | Bharathi Kannamma : வெண்பா தாக்கப்பட்டார்.. 😂 பாரதியுடன் அவசர திருமணம்.. படையோடு வந்து தடுத்த கண்ணம்மா.!

அண்ணன் தம்பி இடையே நடக்கும் மோதல் பற்றிய இந்த கேங்ஸ்டர் படத்தில் பீச்சாங்கை, என்னங்க சார் உங்க சட்டம் படங்களில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் சிந்துபாத், சேதுபதி படங்களில் நடித்த நடிகர் லிங்கா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். 

Mera Madha Margaya Asal Kolar Rap Oppari Parole

இப்படத்தில் நாயகிகளாக மோனிஷா, கல்பிக்கா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் வினோதினி, ஜானகி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி முன்னதாக வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கதைப்படி தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறார் தம்பி. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக வடிவம் பெறுகின்றன.

Mera Madha Margaya Asal Kolar Rap Oppari Parole

வியாசர்பாடியில் தொடங்கி திருச்சி, மதுரை சென்று விக்கிரவாண்டி சேலையூர் வரை படரும் இந்த கதை 48 மணி நேரத்தில் நடப்பதாக, க்ரைம் -த்ரில்லர்-ஆக்‌ஷன் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இப்படம் அரசியல் பேசும், அரசியல் அல்லாத படம் என்றும் இப்படத்தின் இயக்குநர் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் இப்படத்தில் ராப் பாடகர் அசல் கோலார் பாடியுள்ள பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

Mera Madha Margaya Asal Kolar Rap Oppari Parole

முன்னதாக ‘ஜோர்த்தால’ எனும் பாடலை ஆடி பாடி, யூடியூப் தளத்தில் வெளியிட்டு படு பயங்கர பேமஸ் ஆன அசல். தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 6 வது சீசனில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார். அண்மையில் இந்நிகழ்ச்சியில் இருந்து அசல் கோலார் வெளியேறிய நிலையில், தற்போது அசல் கோலார் எழுதி பாடியுள்ள பாடலான ‘மேரா மாதா மர்கயா’ எனும் பாடல் பரோல் திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

Mera Madha Margaya Asal Kolar Rap Oppari Parole

இப்பாடலை அசல் கோலாருடன் இணைந்து எழுதி இசையமைத்ததுடன் அசல் கோலாருடன் இணைந்து பாடியுள்ளார் ராஜ்குமார் அமல். பரோல் திரைப்படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரைக்கு வருகிறது.

 

Also Read | Baakiyalakshmi : ‘இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்துருக்கு.. ஆனா இதான் முதல் தடவ’! - பாவம்யா கோபி..😂

மேலும் செய்திகள்

Mera Madha Margaya Asal Kolar Rap Oppari Parole

People looking for online information on Asal Kolar Rap Oppari Parole, Mera Madha Margaya, RS Karthik will find this news story useful.