www.garudabazaar.com
iTechUS

காரை சேதப்படுத்தினாரா Bigg Boss நித்யா?.. பரபரப்பு குற்றச்சாட்டு - பின்னணி என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss புகழ் நித்யா சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Actress Nithya controversy about neighbour car issue

இது தொடர்பாக நித்யா சார்பில் அளித்துள்ள தகவலின் படி, அவரது வீட்டிற்கு அருகே அமைந்துள்ள இரண்டு வீடுகளில் Roof Top பணிகள் நடைபெற்று வந்ததால் சல்லி, மணல் உள்ளிட்ட பொருட்களை சாலை அருகே வெளயே போடப்பட்டிருந்தது.

இதனால், நித்யாவின் காரை அவர்கள் சற்று தள்ளி விடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மற்றொரு வீட்டு வாசலுக்கு அருகே தனது கார் மற்றும் பைக் ஆகியவற்றை நித்யா நிறுத்தியதாகவும் தெரிகிறது.

ஆனால், தனது வீட்டின் முன்  நித்யா கார் மற்றும் பைக்கை நிறுத்தி இருந்தது அங்கே இருந்த நபருக்கு பிடிக்கவில்லை. இதனால், அந்த வீட்டு உரிமையாளர் தனது காரை வெளியே எடுக்கும் போது நித்யா பைக்கில் இடித்தும், இன்னொரு படி மேலே போய் தகாத வார்த்தைகளை நித்யாவிடம் பயன்படுத்தியும் வந்துள்ளார். இதனால், நித்யாவும் அந்த நபர் மீது சற்று கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.

அப்படி இருக்கையில், சமீபத்தில் படம் பார்த்துவிட்டு இரவு நேரத்தில் நித்யா திரும்பி கொண்டு இருந்த சமயத்தில் தனது கையில் இருந்த கீ செயின் கீழே விழுந்துள்ளது. இது எதிர் வீட்டு நபரின் கார் முன்னே நடந்துள்ளது. இதனை எடுக்க அவர் கீழே குனிந்த நிலையில், தனது வீட்டில் உள்ள காரின் மீது கல் எறிய தான் அவர் குனிந்தார் என்றும் அருகே உள்ள வீட்டின் உரிமையாளர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். முன்னதாக அந்த நபரின் கார் சேதமாகி இருந்த நிலையில், சிசிடிவியை பரிசோதித்த போது நித்யா காரை இரவு நேரத்தில் கடந்து செல்கிறார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் நித்யாவை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் கல் எறிந்திருந்தால் அது தொடர்பான முழு வீடியோ இருந்திருக்க வேண்டும் என்றும் அப்படி அந்த வீடியோ இல்லை என்பதால் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை தன் மீது வைத்ததாகவும் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நித்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மீது நித்யா தரப்பில் இருந்தும் புகார் ஒன்று அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. நித்யாவை குறித்து தற்போது வெளியாகி வரும் தகவல், சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரை சேதப்படுத்தினாரா BIGG BOSS நித்யா?.. பரபரப்பு குற்றச்சாட்டு - பின்னணி என்ன? வீடியோ

Tags : Nithya

தொடர்புடைய இணைப்புகள்

Actress Nithya controversy about neighbour car issue

People looking for online information on Nithya will find this news story useful.