www.garudabazaar.com

Happy News ! நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் 'சரவணன் மீனாட்சி' புகழ் மைனா நந்தினி கர்ப்பமாக உள்ள நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு baby Coming Soon என அவரது கணவர் யோகேஷ்வரன் அறிவித்திருந்தார்.

Actress Myna Nandhini blessed with baby boy | ஆண் குழந்தைக்கு அம்மாவான நடிகை மைனா நந்தினி

இந்நிலையில் மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் ஸ்பெஷல் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.

Actress Myna Nandhini blessed with baby boy | ஆண் குழந்தைக்கு அம்மாவான நடிகை மைனா நந்தினி

இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்துகள் குவிந்து வருகிறது. சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ் பெற்ற மைனா நந்தினி ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் சிவகார்த்திகேயனின்  'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

HAPPY NEWS ! நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது ! வீடியோ

Actress Myna Nandhini blessed with baby boy | ஆண் குழந்தைக்கு அம்மாவான நடிகை மைனா நந்தினி

People looking for online information on Myna Nandhini, Yogeshwaran will find this news story useful.