www.garudabazaar.com

தமிழ் பிக்பாஸ் சீசன் 4 : போட்டியாளராக களமிறங்குகிறாரா 'பிகில்' அம்ரிதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் புரொமோவை விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Bigil Amritha reacts Vijay Tv and Kamal Haasan's Bigg Boss 4 rumour | பிக்பாஸ் குறித்து பரவும் தகவலுக்கு பிகில் அம்ரிதா ரியாக்சன்

மேலும் 'காளி', 'இஸ்பேட் ராஜாவாவும் இதய ராணியும்' நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், அமுதவாணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக Behindwoods சார்பாக தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் 'பிகில்' படத்தில் தென்றல் என்ற வேடத்தில் நடித்திருந்த அம்ரிதா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிாரம் ஸ்டோரியில் யார் என்னை பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்டில் சேர்த்தது என்று வித்தியாசமான ரியாக்சன்களுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigil Amritha reacts Vijay Tv and Kamal Haasan's Bigg Boss 4 rumour | பிக்பாஸ் குறித்து பரவும் தகவலுக்கு பிகில் அம்ரிதா ரியாக்சன்

People looking for online information on Amritha Aiyer, Bigg boss, Vijay tv will find this news story useful.