COBRA D Logo Top
www.garudabazaar.com

கணவர் ரவீந்தருடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்த மகாலட்சுமி.. குவியும் வாழ்த்துக்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

ravindar comment on his wife mahalakshmi insta post

அதே போல, ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வந்தார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் அதிகம் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பிரபல விஜே மற்றும் நடிகை மகாலட்சுமியை தயாரிப்பாளரான ரவீந்தர் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் தங்களின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் வைரலாகி இருந்தது.

மேலும், ஏராளமானோர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் அங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலிலும் நடித்து வருகிறார். ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம், திருப்பதி கோவிலில் வைத்து நடைபெற்றிருந்தது.

 

திருமணத்திற்கு பின்னர், தங்களின் திருமண புகைப்படங்களை இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் கேப்ஷனில், "நீங்கள் என் இதயத்தை திருடி விட்டீர்கள். ஆனால், அதை நீங்களே வைத்திருக்க அனுமதிக்கிறேன்" என குறிப்பிடடிருந்தார்.

இதன் பின்னர், மனைவியின் கேப்ஷனுக்கு பதிலளித்த ரவீந்தர், அதன் கமெண்ட்டில், "நீ அதை மறந்து விட்டாய் என நான் நினைத்தேன். நான் என்னுடைய இதயத்தை பதிலாக வைத்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

ravindar comment on his wife mahalakshmi insta post

People looking for online information on Mahalakshmi, Marriage, Ravindar Chandrasekaran will find this news story useful.