Anantham
www.garudabazaar.com

”இப்டிலாம் வர மாட்டேங்குதே…” .. தமிழில் ரீமேக் ஆன பிரபல உலக படம் குறித்து இளையராஜா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்ற ஈரானிய சினிமா உலக சினிமாக்கள் வரிசையில் கிளாஸிக்காக கொண்டாடப்பட கூடிய ஒரு படம்.

Ilaiyaraaja talked about children of heaven classic movie

Also Read | “சங்கையா… 24 கொலை”… “பொன்னி… 25 கொலை”… கீர்த்தி சுரேஷ், செல்வராகவனின் சாணிக்காயிதம் டிரைலர்!

சில்ட்ரன் ஆஃப் ஹெவன்…

1997 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இந்த படம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஆனால் அந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற படத்தை விட உலகளவில் கொண்டாடப்படும் படமாக சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மஜித் மஜீது தற்போது உலகளவில் கொண்டாடப்படும் இயக்குனராக உள்ளார். அவர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியாவை மையமாகக் கொண்டு ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

Ilaiyaraaja talked about children of heaven classic movie

ரீமேக்…

இப்படி உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக தமிழில் அக்கா குருவி திரைப்படம் உருவாகியுள்ளது மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.  PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Ilaiyaraaja talked about children of heaven classic movie

கதைக்களம்…

ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக,  மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.  சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஆண்மா கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி.

உச்சி முகர்ந்த இசைஞானி…

இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. அதில் இளையராஜா பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரது பேச்சில் “சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால் உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி சில்ட் ரன் ஆஃப் ஹெவன் படம் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை  மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது. நம் தமிழ்நாட்டில்  ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை  என வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு  உயர்வான சிந்தனை தோன்றிஅவனை தாக்கினால் தான், உயர்வான ஒன்றை உருவாக்க முடியும்.  இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை.  ஆனால் நம்ம இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார்.

Ilaiyaraaja talked about children of heaven classic movie

நான் இந்த மாதிரி புது இயக்குநர்கள் வர வேண்டும் என்றும் அவர்களுக்கு இசையமைப்பதற்கும் காரணம் அது தான்.  மணிரத்னத்தின் முதல் படத்துக்கு இசையமைத்த காரணமும் அது தான். நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப்படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும் இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.” எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”இப்டிலாம் வர மாட்டேங்குதே…” .. தமிழில் ரீமேக் ஆன பிரபல உலக படம் குறித்து இளையராஜா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja talked about children of heaven classic movie

People looking for online information on இளையராஜா, சில்ட்ரன் ஆஃப் ஹெவன், Children of heaven classic movie, Ilaiyaraaja will find this news story useful.