'இந்த லவ் கிடைச்சதுக்கு... நாங்க..!' - செம ஹாப்பியாக கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கீர்த்து சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புதிய வீடியோ | actress keerthi suresh shares a new video for 5 million followers in instagram

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். மேலும் இவர் மகாநதி படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ந்து, தனது செல்ல நாய் நைக்குடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர்களுக்கு இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோயர்கள் வந்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், ''இப்போது நாங்கள் 5 மில்லியன் குடும்பத்தில் இணைந்திருக்கிறோம். நானும் நைக்கும் இந்த அன்புக்கு ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம்' என பதிவிட்டிருக்கிறார்.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புதிய வீடியோ | actress keerthi suresh shares a new video for 5 million followers in instagram

People looking for online information on Annaatthe, Keerthi Suresh will find this news story useful.