ரசிகர்களிடம் உதவி கேட்ட சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' நடிகை - அப்படி என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார்.

Rajinikanth's Annaatthe actress Khushbu request fans to help her, here's why | அண்ணாத்த நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களி

இந்நிலையில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும், 3 வெவ்வேறு இடங்களில் இருந்து 3 முறை லாக் (Log In) இன் செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும் ட்விட்டர் தெரிவித்தது. என்னால் ட்விட்டரை Log In செய்ய முடியவில்லை.

இதுகுறித்து கேட்ட போது, என்னுடைய அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என்று ட்விட்டர் தெரிவிக்கிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று யாராவது தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

'அண்ணாத்த' படத்தில் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Entertainment sub editor