அம்மாவான ‘2.0’ எமி ஜாக்சன்- வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது கர்ப்பம் குறித்த அறிவிப்பினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Amy Jackson announces her pregnancy in Instagram post on Mother's Day

தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகாத எமி ஜாக்சன், ஹாலிவுட் வெப் சீரிஸ் தொடரில் நடித்தார்.

கடந்த சில மாதங்கங்களுக்கு முன் தொழிலதிபர் George Panayiotou  உடனான காதல் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் எமி ஜாக்சன் தெரிவித்திருந்தார்.

தற்போது தான் கர்ப்பமாக இருப்பதையும், தங்களது அன்பின் அடையாளமாக உருவாகியிருக்கும் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.