JACKPOT : நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்கும், ரம்யா பாண்டியன்... அதிரடி சரவெடியாக கிடைத்த 2 படங்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். அதன் பிறகு 'குக் வித் கோமாளி' என்ற தனியார் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் அவர், தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்ட்டாகிராமில் பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் தற்போது கைவசம் இருக்கும் படங்கள் என்ன என்று கேட்க, ரம்யா பாண்டியன் "ஆம். கையில் இரண்டு படங்கள் இருக்கிறது. சூர்யாவின் 2D நிறுவனத்துடன் ஒரு படம் மற்றும் CV குமார் நிறுவனத்துடன் ஒரு படம் என இரண்டு படங்கள் இருக்கிறது" என்று அதிரடியாக கூறியுள்ளார்.
Tags : Ramya Pandian, Surya, 2d productions, Cooku with comali, Corona