''சாதியை வைத்து ஹர்ட் பண்ணாதீங்க.. ப்ளீஸ்..!" - பிரபல பிக்பாஸ் நடிகை உருக்கம்.! நடந்தது என்ன.?!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை அபிராமி உருக்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அபிராமி. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகமெங்கும் பிரபலமானார். இதையடுத்து இவர் தற்போது ஆரி அர்ஜுனா, லாஸ்லியா நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலான கருத்தை தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தினத்தன்று அவர் பகிர்ந்த போட்டோவுக்கு, அவரது சாதியை சுட்டிக்காட்டி பலர் கமன்ட் செய்து விமர்ச்சித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும்''இந்த கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் கூட, சிலர் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றனர். தயவு செய்து இன்னொருவரை காயப்படுத்த சாதியையும் இனத்தையும் ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள். என்னை ஹர்ட் பண்ணிக்கோங்க, வேண்டாம்னு சொல்லல, ஆனால் சாதியை பயன்படுத்தி ஹர்ட் பண்ணாதீங்க, ப்ளீஸ்'' என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.