Nenjuku Needhi

Breaking: விமல் & சதீஷ் இணையும் புதிய படம்… Title பற்றி வெளியான தகவல்… விரைவில் First Look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விமல் நடிப்பில் விலங்கு வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

Actors vimal and sathish reportedly titled as Thudikum Karangal

Also Read | "ஒரு பாட்டுக்கு tune பண்றேன்னு…"… ARR குறித்து பார்த்திபன் எமோஷனல்!

கிராமத்துக் கதைகளில் மிளிர்ந்த விமல்…

‘பசங்க’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சய்மானவர் விமல். அதன் பின்னர் சற்குணம் இயக்கிய ‘களவாணி’ திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் எதார்த்த நாயகனாகவும் பக்கத்து வீட்டு பையனாகவும் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் விமல். இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார்.

Actors vimal and sathish reportedly titled as Thudikum Karangal

களவாணி படத்துக்குப் பிறகு மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தூங்கா நகர்ம், தேசிங்கு ராஜா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். அதைபோலவே நடிகர் விமல் நடித்த வாகை சூட வா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்ட உதவியது. இதையடுத்து விமல் சில படங்களைத் தயாரித்தும் அதில் நடித்தார்.

கவனம் ஈர்த்த ‘விலங்கு’

சமீபத்தில் ஜி 5 ஓடிடி தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸானது. இந்த வெப் தொடரை புருஸ் லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த தொடரின் சில காட்சிகள் மீம்களாகவும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

Actors vimal and sathish reportedly titled as Thudikum Karangal

விமல் நடிக்கும் துடிக்கும் கரங்கள்…

இந்நிலையில் இப்போது விமல் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விமல் அடுத்து ‘துடிக்கும் கரங்கள்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தில் நடிகர் சதீஷும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேலுதாஸ் இயக்க உள்ளதாகவும், படத்துக்கு மணிஷர்மா இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Actors vimal and sathish reportedly titled as Thudikum Karangal

Also Read | #VikramInAction இது வேற லெவல்… விக்ரம் படத்துக்காக டிவிட்டரில் எமோஜி… வெளியான செம்ம மாஸ் update

தொடர்புடைய இணைப்புகள்

Actors vimal and sathish reportedly titled as Thudikum Karangal

People looking for online information on Sathish, Thudikum Karangal, Thudikum Karangal Movie Updates, Vimal will find this news story useful.