www.garudabazaar.com
iTechUS

சூப்பரா விளையாடுறாரே.. விஜய் பரிசளித்த BAT-ல கிரிக்கெட் ஆடும் யோகி பாபு.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர்.

Actor Yogi Babu Playing Cricket with Vijay Gifted Bat

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு குல தெய்வம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன் யோகி பாபு & மஞ்சு பார்கவி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. சில மாதங்களுக்கு முன் தனது மகன் விசாகனின் இரண்டாவது பிறந்தநாள் மற்றும் மகளுக்கு பெயர் சூட்டு விழாவை தனது வீட்டில் யோகி பாபு நடத்தினார். இந்த விழாவில் நடிகர் பார்த்திபன் & அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.

Actor Yogi Babu Playing Cricket with Vijay Gifted Bat

Images are subject to © copyright to their respective owners.

தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு  தனது டிவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் ரசிகர் ஒருவர், "அண்ணா விஜய் சார் பேட் ஆ?" என கேள்வி கேட்க இதற்கு 'Yes' என யோகி பாபு பதில் அளித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Yogi Babu Playing Cricket with Vijay Gifted Bat

People looking for online information on Vijay, Yogi Babu will find this news story useful.