கார்த்தி நடித்துள்ள 'கைதி' படத்தின் சென்னை சிட்டி முதல் மூன்று நாள் வசூல் இவ்வளவா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 28, 2019 12:35 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் 'அஞ்சாதே' நரேன், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படம் சென்னை சிட்டியில் முதல் மூன்று நாட்களில் ரூ. 1.07 கோடி வசூலித்துள்ளதாம்.
Tags : Karthi, Lokesh Kanagaraj, Dream Warrior Pictures, Kaithi