விவேக் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது காமெடி தாண்டி ஹீரோவாகவும் கலக்கி வருகின்றார்.

இவர் நடிப்பில் வந்த வெள்ளைப்பூக்கள் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, இந்நிலையில் விவேக் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்
நாட்டில் தண்ணீர் பிரச்சனை எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டுள்ளது, தண்ணீருக்காக எவ்வளவு மக்கள் காத்திருக்கின்றார்கள் என்பதை காட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு pic.twitter.com/OTl3AcRCOd
— Vivekh actor (@Actor_Vivek) May 15, 2019