'அச்சு அசலா' என் குரல் போலவே இருக்கே.... என்னடா இது! ஷாக்கான நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடி நடிகர் விவேக் நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு படத்தில் வரும் காமெடி காட்சியில் விவேக் பேசிய வசனத்தை கொஞ்சம் உல்டா செய்து, கொரோனா விழிப்புணர்வுக்காக மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

மீம்ஸ் கிரியேட்டர்களை பாராட்டிய விவேக் |Actor vivek praise memes creator for corona virus

அதை பார்த்த விவேக் அச்சு அசலா என்னுடைய குரல் போலவே இருக்கே என மீம் கிரியேட்டர்களை பாராட்டி அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சமூக நலனுக்காக பல்வேறு நல்ல கருத்துக்களை தொடர்ந்து தனது காமெடி காட்சிகளில் சொல்லி வருபவர் விவேக். இது மட்டும்மின்றி சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.

சினிமாவை தவிர பல்வேறு சமூக பணிகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறையும் காட்டி வருகின்றார். இவரை போன்றே இவரது ரசிகர்களும் இருப்பது தான் ஆச்சரியம். இவரது காமெடி காட்சியை ஒரு நல்ல விழிப்புணர்வு விஷயத்திற்காக பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

Entertainment sub editor

Tags : Vivekh, Corona