அடேங்கப்பா! - டிவிட்டரில் உச்சத்துக்கு சென்ற தல அஜித்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 23, 2019 07:17 PM
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து தல அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய , யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் தளம் கடந்த 2019 ஆம் ஆண்டில் முதல் 6 மாத காலகட்டத்தில் டிரெண்டிங் ஹேஷ்டேக் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் முதலிடத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் லோக்சபா எலெக்ஷன் 2019 என்ற ஹேஷ்டேக்கும் மூன்றாவது இடத்தில் வேர்ல்டு கப் கிரிக்கெட் ஹேஷ்டேக்கும் இடம் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் மகேஷ் பாபுவின் மஹார்ஷி திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார்.