o2

Breaking: வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’…. ‘வேற லெவல்’ ஷூட்டிங் update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

Vadivelu suraj Naai sekar Returns movie shoot wrapped

Also Read | சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து ‘பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் பிரபல நடிகர்… Netflix வெளியிட்ட Update

வடிவேலு ரி எண்ட்ரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் தீவிரமாக நடிகக்வில்லை. வெகுசில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இதற்கிடையில் நடிப்பில் தொடங்கிய இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படம் ட்ராப் ஆனது. ஆனால் சமூகவலைதளங்ஜளில் மீம்ஸ் மன்னன் என்று சொல்லும் அளவுக்கு எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வடிவேலுவின் ரியாக்ஷன்கள், வசனங்கள், பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும். சமூகவலைதளங்களின் வளர்ச்சியால் வடிவேலு அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களும் கொண்டாடும் ஒரு கலைஞராக இருந்து வருகிறார்.

Vadivelu suraj Naai sekar Returns movie shoot wrapped

அடுத்தடுத்து இரண்டு படங்கள்

கடந்த சில ஆண்டுகளில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் படத்திலும், பின்னர் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா திரைப்படத்திலும் தோன்றிய நடிகர் வடிவேலு, இதனை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவர் இசையில் வடிவேலு ஒரு பாடலையும் பாடியுள்ளார். மேலும் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அதுபோலவே சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு

கடந்த சில மாதங்களாக நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. படத்தில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இது சம்மந்தமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியாகி இணையத்தில் வைரலானது.  வடிவேலு பிரபுதேவா கூட்டணியில் உருவான பேட்டராப் உள்ளிட்ட பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டான நிலையில் இந்த செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.

Vadivelu suraj Naai sekar Returns movie shoot wrapped

Breaking தகவல்

இந்நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் ரிலீஸ் உள்ளிட்ட அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | அருள்நிதி நடிக்கும் ‘D ப்ளாக்’… டிஜிட்டல் & ஓவர்சீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu suraj Naai sekar Returns movie shoot wrapped

People looking for online information on Naai sekar Returns movie, Naai sekar Returns movie Updates, Suraj, Vadivelu will find this news story useful.