www.garudabazaar.com

Naai Sekar Returns : எவ்ளோ நாள் ஆச்சு... வடிவேலுவின் அடுத்த பட பாட்டு வருது.. செம அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டரின்ஸ் திரைப்படம் குறித்த சூப்பரான தகவல், இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

vadivelu Naai sekar returns movie single update

கடந்த சில ஆண்டுகளில், விஷாலுடன் கத்திச் சண்டை, ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா, விஜய்யுடன் மெர்சல் என ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே தோன்றி இருந்த காமெடி நடிகர் வடிவேலு, சுமார் ஐந்து ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் தென்படவில்லை.

ஆனாலும், இணையத்தில் உலா வரும் பெரும்பாலான மீம்ஸ்களில் வடிவேலுவை நிச்சயம் காணலாம். அந்த வகையில், அடுத்த தலைமுறையினர் மத்தியிலும் அதிகம் பிரபலம் அடைந்துள்ளார் வடிவேலு.

இதனைத் தொடர்ந்து, தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். அதே போல, பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்த பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், மாமன்னன் என்னும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்டோருடனும் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார்.

இதில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் முடிவடைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. முன்னதாக, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியாகி, வடிவேலுவின் அசத்தலான் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அந்த வரிசையில் தற்போது ஒரு அசத்தலான தகவல் வெளி வந்துள்ளது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருவது அனைவரும் அறிந்த தகவலே. அது மட்டுமில்லாமல், அவரது இசையில் நடிகர் வடிவேலு இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். வடிவேலு பாடலை பாடுவது போன்ற ஒரு சின்ன வீடியோவையும், சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

அது மட்டுமில்லாமல், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா, வடிவேலு பாடிய ஒரு பாடலுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இது தொடர்பாக வடிவேலு மற்றும் பிரபுதேவா உள்ளிட்டோர், நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் முதலாவது சிங்கிளை இந்த மாத இறுதியில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

vadivelu Naai sekar returns movie single update

People looking for online information on Prabhudeva, Santhosh Narayanan, Suraaj, Vadivelu will find this news story useful.