'கெட்டது செய்யாம இருந்தாலே போதும்; - 'பிகில்' 25வது நாள் குறித்து பிரபல நடிகர் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம்  'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Actor Soundara Raja Comments Thalapathy Vijay's Bigil 25th Day

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தின் 25வது நாள் கடந்துள்ளதை ரசிகர்களுடன் நடிகர் சௌந்தர ராஜா கொண்டாடினார். அப்போது ரசிகர்களுடன் இணைந்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், ''நாலு பேருக்கு நல்லது செய்யனும்னு கூட நினைக்க வேண்டாம்,கெட்டது செய்யாம இருந்தாலே போதும்.நம்ம மனசும், உடலும் ஆரோக்கியமா இருக்கும். தளபதி விஜய் அண்ணாவின் பிகில் 25வது நாள் வெற்றி விழா & மக்கள் நல பணி கொண்டாட்டம். ஒரு பாட்டியின் ஆசீர்வாதம் சந்தோசத்தின் உச்சம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.