''நானும் ரஜினியும் அரசியலில் இணைந்து பயணிப்போம்'' - கமல் அதிரடி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 19, 2019 08:38 PM
உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சென்சுரியன் யூனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தது.
இதனையடுத்து செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவரிடம், நீங்களும் கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து பயணிப்பீர்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் 40 ஆண்டுகளாக இணைந்து தான் பயணிக்கிறோம். அரசியலில் இணைய வேண்டி வந்தால் கண்டிப்பாக சொல்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் கண்டிப்பாக சேர்ந்து பயணிப்போம் என்று பதிலளித்தார்.