''லோகேஷ் கனகராஜ் வாய்ஸ்ல தளபதி மிமிக்ரி பண்ணாரு'' - பிரபல இயக்குநர் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தற்போது டெல்லியில் தளபதி 64 பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Director Rathna Kumar about Thalapathy Vijay and Lokesh Kanagaraj in Thalapathy 64

சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்க்கீஸ், ஸ்ரீமன், பிரேம், விஜே ரம்யா, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் 'மேயாத மான்', 'ஆடை' படங்களின் இயக்குநர் ரத்ன குமார் கதாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பயணங்கள், மக்களுடனான சந்திப்பு , கதை எழுதும் பணி உள்ளிட்டவைகளால் டெல்லியில் இன்று என்னால் இருக்க முடியவில்லை.

அப்போது மச்சி ஹேப்பி பர்த்டே டா என்று தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் போனிலிருந்து அழைத்து அவரைப் போல மிமிக்ரரி செத்தார். லைஃப் ஸ் வொர்த்து லிவிங் என்று பகிர்ந்துள்ளார்.