தளபதி 64ல் இணைந்து சர்க்கார் திரைப்பட பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 17, 2019 02:27 PM
'பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தில் பிரேம்குமார் இணைத்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி, விஜே ரம்யா, டிக் டாக் புகழ் லிண்டு ரோணி, கல்யாணி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் "சர்கார்" படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்த பிரேம்குமார் தற்போது இணைந்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தளபதி 64 படத்தில் இணைந்தது மகிழ்ச்சி, மீண்டும் தளபதியுடன் சேர்ந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி, எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். பிரேம் குமாருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்