நடிகர் சூரியின் மகனுக்கு ‘பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ விருது
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 18, 2019 03:06 PM
சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் பிரபலம் அடைந்தவர் சூரி. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ள அவர் சமீபத்தில் நடித்த 'நம்ம வீட்டுப் பிள்ளை', 'சங்கத்தமிழன்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.
தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினி 168, கதிருடன் நடிக்கும் ’சர்பத்’, வெற்றிமாறன் இயக்கும் படம் என்று பல்வேறு படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில் தனது முகநூலில் மகன் சஞ்சய் பற்றி பதிவிட்டுள்ள அவர், சமீபத்தில் மதுரை கிரிக்கெட் அசோசேஷன் சார்பில் நடைபெற்ற 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஜெய்த்து ’பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்’ விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags : Soori