www.garudabazaar.com
iTechUS

அமலாபால் தம்பியா இது?.. சகோதரர் பிறந்தநாளில் வேறலெவல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலாபால், தனது தம்பியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வீடியோவை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.

Actress Amala Paul wishes her brother birthday

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மாஸா சண்டை செய்றாங்களே.. Suriya 42 நாயகி திஷா பட்டானி பகிர்ந்த தெறி வீடியோ!

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க ஒரு விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார். அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver, டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.

Actress Amala Paul wishes her brother birthday

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார்.

நடிகை அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.  சமீபத்தில் அமலாபால்  தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக லண்டனில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள டவர் பாலத்தில் நின்று விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

நடிகை அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன்  'ஆடுஜீவிதம்', மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர், கைதி படத்தின் இந்தி ரீமேக் 'போலா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Actress Amala Paul wishes her brother birthday

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை அமலாபால், தனது இளைய சகோதரர் ஜோசப் ஆல்வின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். மேலும் இதுவரை காணாத புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "எனது இளைய சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீதான் என்னுடைய உலகம். ஒரு குழந்தையிலிருந்து நீ வளர்ந்து அழகான மென்மையான மனிதனாக பரிணமிப்பதைக் காணும் இந்த பயணம் சாகசங்கள் நிறைந்தது.  நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அன்பே. நீ எங்கு சென்றாலும் உன் அன்பை பரப்புகிறாய் !!! ஒரு குழந்தையைப் போல என்னை நேசிக்கும் மற்றும் ஒரு போர்வீரனைப் போல என்னைக் காக்கும் அன்பான என் அன்பே!" என அமலாபால் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ஜெயிலர் பட பிரபலம்.. வைரல் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Amala Paul wishes her brother birthday

People looking for online information on Amala Paul, Amala Paul brother birthday will find this news story useful.