பெப்சி ஊழியர்களுக்கு நடிகர் யோகி பாபு என்ன உதவி செய்திருக்கிறார் பாருங்க.
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகுந்த இந்த கடினமான சூழல் உருவாகியிருக்கிறது.

படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா தொழில் சார்ந்த தின கூலிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனையடுத்து பெப்ஸி சங்கத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி நடிகர்கள் அனைவரும், சங்கத்தை சார்ந்த ஊழியர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனையடுத்து பல நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் யோகிபாபு தற்போது1250 கிலோ அரிசியை பெப்சி ஊழியர்களுக்காக வழங்கியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.