www.garudabazaar.com

"மனைவிக்கு கொடுத்த முதல் காதலர் தின பரிசு".. நடிகர் ஷாருக் கானின் பதில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது மனைவிக்கு முதலில் அளித்த காதலர் தின பரிசு பற்றி மனம் திறந்திருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor sharukh khan reveals his first valentine gift to his wife

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என் உயிரே நீ தான்".. இதுவரை காணாத போட்டோக்களை வெளியிட்டு சினேகாவை வாழ்த்திய பிரசன்னா!

பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஷாருக் கான். கடந்த சில வருடங்களாக நடிப்பு உலகில் இருந்து விலகி இருந்த ஷாருக் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' இப்படத்தை இயக்கி இருந்தார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகியது. வருடக்கணக்கில் காத்திருந்த ஷாருக் ரசிகர்களுக்கு இந்த படம் பட்டாசான ட்ரீட்டாகவே அமைந்துள்ளது. படம் வெளியாகி முதல் 5 நாளில்  543 கோடி ரூபாய்களை இந்த படம் வசூல் செய்து இந்திய அளவில் சாதனையை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உலகளவில் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Actor sharukh khan reveals his first valentine gift to his wife

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் காதலர் தினமான இன்று நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அவ்வப்போது #askSRK எனும் ஹேஷ்டாக் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ரகர்களிடம் பல்வேறு கருத்துக்களை ஷாருக் கான் பகிர்ந்துகொண்டார்.

Actor sharukh khan reveals his first valentine gift to his wife

Images are subject to © copyright to their respective owners.

அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் மனைவிக்கு நீங்கள் அளித்த முதல் காதலர் தின பரிசு என்ன? எனக் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஷாருக் கான்,"என்னுடைய ஞாபகம் சரியாக இருந்தால், அது நடந்து 34 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு ஜோடி இளஞ்சிவப்பு பிளாஸ்டிக் காதணிகள் என்று நான் நினைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actor sharukh khan reveals his first valentine gift to his wife

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஷாருக் கான் பிரபல ஆடை வடிவமைப்பாளரும் தயாரிப்பாளருமான கௌரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், தன்னுடைய மனைவிக்கு முதலில் பிளாஸ்டிக் காதணிகளையே பரிசாக கொடுத்ததாக ஷாருக் கான் தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | கணவர் ஆதிக்கு செல்லப் பெயர் வைத்து வாழ்த்திய நிக்கி கல்ராணி 😍.. காதலர் தின ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor sharukh khan reveals his first valentine gift to his wife

People looking for online information on Shah Rukh Khan, Sharukh khan Valentines day will find this news story useful.