குட்டிக் கத மட்டுமல்ல, அவரோட ஸ்டேஜ் பெர்ஃமான்ஸ் இருக்கா ? - பிரபல நடிகர் ரியாக்ஷன்
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த விழா சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாகவிருப்பதாகவும், இந்த முறை இசை வெளியீட்டு விழாவை உங்கள் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் சன் டிவியில் பாருங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தகவலை ஷாந்தனு பகிர, நடிகர் நிதின் சத்யா , அப்போ ஸ்டேஜ் ஃபெர்மான்ஸ் இருக்கு கரெக்டா ? என கேட்க அதற்கு ஷாந்தனு, வடிவேலு ஜிஃபை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அவரது டான்ஸ்க்கு காத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசையில் குட்டி ஸ்டோரி பாடல் வேற லெவல் ஹிட்டடிக்க, மற்ற பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன், விஜே ரம்யா, பிரேம், ஸ்ரீமன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
https://t.co/qot8jKtht2 pic.twitter.com/FoHxG7aW4Z
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) March 7, 2020