இயக்குநர் மோகன்.ஜி தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகன்.ஜி. இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் திரௌபதி. ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அண்மையில் வெளியான இத்திரைப்படம், பல்வேறு விவாதங்களுக்கிடையே வெற்றிக்கரமாக திரையரங்கில் ஓடி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தப் படம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'திரௌபதின்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர்தான். விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்'' என அவர் பதிவிட்டுள்ளார்.
#திரெளபதி ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்..
— Mohan G 🔥😎 (@mohandreamer) March 8, 2020