www.garudabazaar.com

"அஜித் சார் Fans க்கு.. அந்த ஒரு சீன் போதும்".. 'துணிவு' பற்றி நடிகர் சமுத்திரக்கனி EXCLUSIVE..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Actor Samuthirakani Exclusive about Action scenes in Thunivu Movie

Also Read | "அசிம் Finale ஜெயிக்க தகுதி இல்ல".. கமல்ஹாசன் முன் லிஸ்ட் போட்டு அடுக்கிய விக்ரமன்!!.. Bigg Boss

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Actor Samuthirakani Exclusive about Action scenes in Thunivu Movie

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

Actor Samuthirakani Exclusive about Action scenes in Thunivu Movie

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Actor Samuthirakani Exclusive about Action scenes in Thunivu Movie

இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அப்போது, படத்தின் ஆக்ஷன் காட்சிகள் குறித்து பேசிய அவர்,"படத்தை நான் இன்னும் முழுசா பார்க்கல. டப்பிங்ல என்னோட காட்சிகள் மட்டும் பார்த்தேன். அஜித் சாரோட ஒரு ஆக்ஷன் ஷாட் பார்த்தேன். அது ஒன்னு போதும்னு சொல்லிட்டேன். அவர் அதுக்காக எவ்வளவு ஹார்ட்வொர்க் போட்ருக்காரு-ன்னு அந்த சீன் பார்த்தா தெரிஞ்சிடும். அஜித் சார் Fans-லாம் அந்த ஸீன் வரும்போது சீட்ல ஏறிடுவாங்க. அந்தளவுக்கு பட்டாசு மாதிரி இருக்கும்" என்றார்.

Also Read | "உங்க பேச்சு அதிகமா இருக்கு".. கதிரவன் vs ஷிவின்.. இன்றைய பிக்பாஸில்..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Samuthirakani Exclusive about Action scenes in Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Samuthirakani, Samuthirakani Exclusive, Thunivu, Thunivu Movie will find this news story useful.