www.garudabazaar.com

Thunivu : ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன துணிவு வில்லன் Excusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. வரும் 2023 பொங்கலுக்கு (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Ajith Movie Villain Chirag Jani Exclusive

Also Read | "வாரிசு படத்தின் ரன்னிங் டைம் இது தானா?".. வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌ இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் டீமை சேர்ந்த சிராக் ஜானி, நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Thunivu Ajith Movie Villain Chirag Jani Excusive

இதில் பேசியவர், “இந்த படத்தில் ஹீரோ இவர் தான், வில்லன் இவர் தான் என சொல்ல முடியாது. இந்த கதையில் ஒவ்வொரு வில்லனுமே ஹீரோ தான். இந்த படத்தில் ஒரு பாம்ப் பிளஸ்ட் காட்சித் தொகுப்பு உள்ளது. இந்த மாதிரி காட்சிகளை பெரும்பாலும் இந்திய படங்களில் பார்வையாளர்கள் இதற்கு முன் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவு ரியலாக இந்த சண்டைக் காட்சியை சுப்ரீம் சுந்தர் உருவாக்கியுள்ளார். சில சண்டை காட்சிகளை நான் பார்த்தேன். அதெல்லாம் அடுத்த லெவலில் தல ரசிகர்களை மிரள வைக்கும். ஒரு மெகா செட்டில், ஒரு மெகா நட்சத்திர பட்டாளத்துடன் இருக்கும். அதனாலேயே இது ஒரு மெகா பவர்.” என பேசியவர், தனக்கு துணிவு படத்தில் தனக்கு கேங்ஸ்டா பாடல் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Thunivu Ajith Movie Villain Chirag Jani Excusive

மேலும் இதில் தான் கேங்ஸ்டராக வருவதாக சொல்லும் சிராக் ஜானி, இந்த படத்தின் போஸ்டர்களை மட்டுமே வைத்து அஜித் சார் கேரக்டரையோ படத்தின் கதையையோ ஒரு முடிவுக்குள் கொண்டு வர முடியாது. இதில் பல அடுக்குகள் உள்ளனர். அஜித் சார் எமோஷன் பகுதிகள் நிறையவே நம்மை ஆச்சரியப்படுத்தும் என தெரிவித்துள்ளார். தான் முதன் முதலில் அஜித் சாரை செட்டில் சந்திக்கும்போது, அவரே தன்னை  “ஹாய்.. நான் அஜித்குமார்,” என அறிமுகப்படுத்திக் கொண்டவர், தனது மேக்கப் மேன், ஸ்போர்ட் பாய் ஆகியோரிடமும் பணிவுடன் போய் பேசிக்கொண்டிருந்தார், அவர் அவ்வளவு எளிமையும் தூய்மையும் கொண்டவர் என நெகிழ்ந்து போனார்.

Thunivu Ajith Movie Villain Chirag Jani Excusive

குறிப்பாக ‘நோ கட்ஸ் .. நோ குளோரி (வலிமை இல்லாமல் மகிமை இல்லை)’ எனும் பிரயோகம் இந்த படத்துடன் எப்படி பொருந்துகிறது என விளக்கும்போது,  “அஜித் சார் இந்த படத்தில் நிறையவே விஷயங்களை செய்வார். அதெல்லாம் தான் அவரை ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும், அதுதான் No Guts No Glory” என கூறியவர், இது ஒரு டிப்பிக்கல் H.வினோத் படம் என்றும், அவருக்கும் அஜித் சாருக்குமான கெமிஸ்ட்ரி, வலிமையான ஒரு பிணைப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Also Read | Varisu : ‘எல்லா இடமும் நம்ம இடம்தான்!’ - ரிலீஸ்க்கு முன் ‘வாரிசு’ படம் பார்க்கும் விஜய்..?!

THUNIVU : ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன துணிவு வில்லன் EXCUSIVE வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Ajith Movie Villain Chirag Jani Exclusive

People looking for online information on Ajith, Ajithkumar, Chilla Chilla Chirag Jani, Gangstaa, Thunivu will find this news story useful.