www.garudabazaar.com

"உங்க பேச்சு அதிகமா இருக்கு".. கதிரவன் vs ஷிவின்.. இன்றைய பிக்பாஸில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Argument between shivin and kathiravan in Biggboss House

Also Read | Varasudu : “ஆடியன்ஸ் ஒருத்தர தான் பார்ப்பாங்க” - 'வாரிசு' தெலுங்கு ரிலீஸ்.. வெளியான புதிய தேதி.!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Argument between shivin and kathiravan in Biggboss House

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். அவர் வெளியேறியதும் பிக் பாஸ் வீட்டில் அவருக்கு மிகவும் நெருங்கிய போட்டியாளரான ஷிவின் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருந்த விஷயம், பலரையும் மனம் உருக வைத்திருந்தது.

Argument between shivin and kathiravan in Biggboss House

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் நாமினேட் செய்து ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதில், ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் உள்ளிட்டோர் அசிமை நாமினேட் செய்து அவர் முகத்தில் நாமினேட்டட் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர்.

Argument between shivin and kathiravan in Biggboss House

இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பேசும் கதிரவன்,"இதை நான் ஷிவினுக்கு கொடுக்குறேன். உங்களுடைய பேச்சு அதிகமா இருக்குன்னு நான் நினைக்கிறதால இதை நான் கொடுக்குறேன்" என ஷிவினிடம் சொல்கிறார் கதிர். அப்போது பேசும் ஷிவின்,"ரெண்டு பேர் சண்டை போட்டுட்டு இருக்கும்போது, வாங்க மனசுவிட்டு -பேசலாம்னு கூப்பிட முடியாது" என்கிறார்.

அப்போது, கதிரவன் குறுக்கிட முயற்சிக்க ஷிவின்,"என்னை பேச விடுங்கள். நான் பேச விடுறதில்லைன்னு என்ன சொன்னிங்க. இப்ப நான் பேசி முடிச்சிக்குறேன். அப்புறம் நீங்க உங்க கருத்தை சொல்லுங்க" என்கிறார். பின்னர் பேசும் கதிரவன், முடிவு எடுப்பது குறித்து பேச அதற்கு பதில் அளிக்கும் ஷிவின்,"எப்போ, 106 நாள் கழிச்சு வெளியே போன அப்புறம் முடிவு எடுக்கணுமா? ஹேண்டில் பண்ண கத்துக்கோங்க. அவாய்ட் பண்ண முடியாது" என்கிறார். இதனை போட்டியாளர்கள் பரபரப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் இன்றைய பிக்பாஸ் எபிசோட் குறித்த விறுவிறுப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

 

Also Read | "விக்ரமன நாமினேட் பண்ணல, ஏன்னா".. பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷன்.. பரபர சம்பவம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Argument between shivin and kathiravan in Biggboss House

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.