www.garudabazaar.com

பொங்கலுக்கு ரிலீஸாகும் 'துணிவு'.. போனி கபூர் வெளியிட்ட சூப்பர் ப்ரோமோ வீடியோ! TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Ajith Kumar Thunivu Movie Promo with Chilla Chilla Song

வரும் 2023 பொங்கலுக்கு (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ajith Kumar Thunivu Movie Promo with Chilla Chilla Song

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ, தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் இடம் பெறாத புதிய ஆக்சன் காட்சிகள் மற்றும் சில்லா சில்லா பாடல் காட்சிகள் இந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளன. படத்தின் ரிலீஸ்க்கு 3 நாட்களே உள்ள நிலையில் இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu Movie Promo with Chilla Chilla Song

People looking for online information on Ajith Kumar, AK, Thunivu will find this news story useful.