பழங்குடி மக்களுக்காக வாழ்ந்து மறைந்த மருத்துவர் - பிரபல ஹீரோ எடுத்த சூப்பர் முடிவு.
முகப்பு > சினிமா செய்திகள்மறைந்த மருத்துவர் ஜெயமோகனுக்கு நடிகர் லாரன்ஸ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் ஹீரோவாகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரின் காஞ்சனா படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் இவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் பழங்குடி மக்களுக்காக பணி செய்து, மறைந்துள்ள மருத்துவர் ஜெயமோகனுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''டாக்டர் ஜெயமோகனின் மறைவு செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன், அவரது குடும்பத்திற்கு என இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நீலகிரியில் உள்ள பழங்குடி கிராமத்திற்கு அயராது பணியாற்றிய அவரது மனிதத்தை பெரிதும் மதிக்கிறேன், இதையடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை, ஆர்வமுள்ள மருத்துவர்களை கொண்டு செய்து தர முடிவு செய்துள்ளேன், மேலும் அந்த மக்களின் மற்ற தேவைகளை ஜெயமோகனின் பெயரில் எதிர்காலத்தில் செய்து கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறேன். இதுவே அவரின் ஆன்மாவுக்கு நான் தரும் மரியாதையாக நினைக்கிறேன்' என அவர் பதிவிட்டுள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 20, 2020