Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

நடிகர் புகழின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள்... அவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

actor pugazh heart warming gesture to fansபுகழின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் தற்பொழுது சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி போன்றோருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கி உள்ளன. அதிலும் குக் வித் கோமாளி புகழ் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து எல்லாவகையான வேலைகளையும் செய்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். எனினும் பழைய நிலைமையை மறக்காது இன்றும் தாழ்மையுடன் ரசிகர்களோடு அவர் உறவாடும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் புகழ் சமீபத்தில் சிவகாசி சென்றுள்ளார். அப்பொழுது அவரது காரை ஏராளமான ரசிகர்கள் முழுவதுமாக சூழ்ந்து கொண்டு விட்டனர். இந்நிலையில் காரில் இருந்து வெளியே வந்த புகழ் அவர்களின் அன்பை பார்த்து நெகிழ்ந்து போய், அவர்களுடன் கை குலுக்கி உரையாடிவிட்டு காரை பின்னோக்கி நகர்த்தி அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags : Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

actor pugazh heart warming gesture to fansபுகழின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள்

People looking for online information on Pugazh will find this news story useful.