Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா... என்ன நிகழ்ச்சின்னு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தனியே ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். அதுவும் இல்லாமல் சனி, ஞாயிறுகளில் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தருவது விஜய் டிவியின் வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் 'ஓல்ட் இஸ் கோல்ட்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் பிக்பாஸ் அர்ச்சனா தொகுத்து வழங்க இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் மாம் மற்றும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

Biggboss archan new show in vijay tv புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் முதன்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி மிகவும் வைரலானது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் விஜய் டிவியில் 'ஓல்ட் இஸ் கோல்ட்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி புகழ் சித்து, ஆலியா மானசா, சுனிதா, பாலா, சௌந்தர்யா போன்ற பல விஜய் டிவி பிரபலங்கள் பங்கெடுக்க இருக்கின்றர். அதுமட்டுமல்லாது பழங்கால நடிகர்களை போன்று வேடமிட்டு நடிக்கும் கலைஞர்களையும் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக பழங்கால நடிகை லதா பங்கேற்க இருக்கிறார். மேலும் நிகழ்ச்சியின் போது  எம்ஜிஆர் பற்றி பேசும் தருணங்கள் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோவை விஜய் டிவி சற்றுமுன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss archan new show in vijay tv புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா

People looking for online information on Archana, Vijay tv will find this news story useful.