www.garudabazaar.com

"ஜீன்ஸ் 2 வர்றதுக்கு வாய்ப்பு இருக்கா?.." பிரசாந்த் உடைத்த 'சீக்ரெட்'.. ஃபேன்ஸ் மீட் 'Exclusive'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில், தொண்ணூறுகள் முதல், முன்னணி நடிகர்களில் ஒருவராக உயரத்தில் இருப்பவர் நடிகர் 'டாப் ஸ்டார்' பிரசாந்த்.

Actor prashanth meet with fans exclusive interview

Also Read | அஜித் பிறந்தநாளில் செம்ம ட்ரீட் வைக்கப்போகும் மம்மூட்டி..! வெளியான வேற லெவல் அப்டேட்

தன்னுடைய திரை பயணத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நாயகனாக நடித்து, நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

அடுத்தபடியாக, ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி, சக்கை போடு போட்டிருந்த 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில், பிரசாந்த் நாயகனாக நடித்து வருகிறார்.

சீக்கிரமா வரும் 'அந்தகன்'..

அந்தகன் என தமிழில் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான தியாகராஜன், தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரசாந்த்துடன், கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில், இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor prashanth meet with fans exclusive interview

கடந்த சில தினங்களுக்கு முன், பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. இதில் பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், தனது பிறந்த நாளையொட்டி, தன்னுடைய ரசிகர்களை நடிகர் பிரசாந்த் சந்தித்த பிரத்தியேக நிகழ்வு, பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இணைய வழியில் தோன்றி நடிகைகள் பூர்ணா, மதுபாலா, சங்கவி பிரியாமணி உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அதே போல, நடிகைகள் சினேகா, வனிதா உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு பிரசாந்தினை வாழ்த்தி, அவருடனான அழகிய தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.

ரசிகர்களுடன் பேசிய பிரசாந்த்

தொடர்ந்து, தன்னுடைய ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய பிரசாந்த், இத்தனை ஆண்டு கால பயணத்தில் தன்னுடைய ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து போய் கருத்துக்களை பேசி இருந்தார். அதன் பின்னர், ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தன்னுடைய அசத்தலான பதிலை அளித்திருந்தார். இதில், அந்தகன் படத்தில் பார்வையற்றவராக நடித்த அனுபவம் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

Actor prashanth meet with fans exclusive interview

ஜீன்ஸ் 2 வருமா?..

அப்போது, ரசிகர் ஒருவர், "இயக்குனர் ஷங்கருடன் ஜீன்ஸ் 2 பண்ண ஐடியா இருக்கா?" என கேட்டார். இதற்கு பதிலளித்த பிரசாந்த், "சமீபத்தில், நானும் ஷங்கர் சாரும் ஒன்றாக விமானத்தில் பயணித்தோம். நிச்சயம் இணைய ஒரு வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்" என பதிலளித்தார்.

இதே போல, மேலும் சில ரசிகர்கள், பிரசாந்தை போராட்ட வீரராகவும், வேட்டி சட்டையுடன் ஒரு லுக்கில் பார்க்க வேண்டும் என்றும் தங்களின் விருப்பத்தினை தெரிவித்தனர். இது போல, பல விருப்பங்களையும் ரசிகர்கள் பிரசாந்திடம் வெளிப்படுத்திக் கொண்டனர்.

ரத்தத்துல எல்லாம் கடிதம் வரும்..

இதற்கு மத்தியில், தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்த ரசிகர்கள் பற்றி பேசிய பிரசாந்த், "எனக்கு அப்போதெல்லாம் நிறைய பேர் கடிதம் எழுதுவார்கள். அதில் நிறைய  கவிதை இருக்கும். சில கடிதங்களில் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அதற்கென நேரம் எடுத்து, அழகாக Decorate செய்து, அவ்வளவு கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி அன்பு காட்டினார்கள். இப்படி ஒரு அன்பு, இன்றுள்ள யாருக்கும் கிடைக்காது" என பிரசாந்த் கூறியதும், அரங்கமே ஆர்ப்பரித்தது.

Actor prashanth meet with fans exclusive interview

தொடர்ந்து தனக்கு வந்த காதல் கடிதம் பற்றி பேசிய பிரசாந்த், "காதல் கடிதத்துடன் தாலி, மோதிரம் என நிறைய வந்துள்ளது. கேசட்டில் பேசி ரெக்கார்ட் செய்து, தங்களின் அன்பினை செலுத்தினார்கள். அதே போல, ரத்தத்தில் எழுதி கடிதம் அனுப்பியது, எனக்கு அதிகம் வேதனையை கொடுத்தது. அந்த சமயத்தில், இப்படி ரத்தத்தில் எழுதினால் யாருக்கும் பதிலளிக்க மாட்டேன் எனவும் என்னுடைய ரசிகர்களிடையே நான் அறிவுறுத்தினேன்" என தெரிவித்தார்.

நடிகர் பிரசாந்த் தனது ரசிகர்களுடன் உரையாடிய முழு வீடியோவைக் காண:

"ஜீன்ஸ் 2 வர்றதுக்கு வாய்ப்பு இருக்கா?.." பிரசாந்த் உடைத்த 'சீக்ரெட்'.. ஃபேன்ஸ் மீட் 'EXCLUSIVE' வீடியோ

Actor prashanth meet with fans exclusive interview

People looking for online information on பிரசாந்த், Prashanth, Prashanth meet with fans will find this news story useful.