Veetla Vishesham Others Page USA

பையா, மங்காத்தா பாடல்களுக்கு சாய்பல்லவியுடன் டான்ஸ் ஆடிய யுவன் சங்கர் ராஜா.. செம்ம CUTE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய் பல்லவியுடன் யுவன் சங்கர் ராஜா BGM மேடையில் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது.

Sai Pallavi Yuvan Shankar Raja Dancing for Paiyaa Mankatha Songs BGM 2022

Also Read | அஜித் நடிக்கும் AK61 படத்தின் டைட்டில்.. 'வலிமை' வினியோகஸ்தர் போட்ட வைரல் ட்வீட்! சம்பவம் Confirm

8 ஆவது Behindwoods Gold Medals Award, கடந்த மாதம் மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது மேடையில் கால் பதித்திருந்தனர்.

வெற்றிமாறன், செல்வராகவன், விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

Sai Pallavi Yuvan Shankar Raja Dancing for Paiyaa Mankatha Songs BGM 2022

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளை வென்றும் அசத்தி இருந்தனர். அந்த வகையில், சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருதை ஷ்யாம் சிங்கா ராய் படத்துக்காக யுவன் சங்கர் ராஜா வழங்கினார்.

Sai Pallavi Yuvan Shankar Raja Dancing for Paiyaa Mankatha Songs BGM 2022

இந்த விருது வழங்கப்பட்ட பின் பின்னர் தொகுப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய் பல்லவி உடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவும் 'பையா' படத்தின் 'அடடா மழைடா' பாட்டிற்கு செம்ம டான்ஸ் ஆடினர்.  மேலும் மங்காத்தா படத்தின் 'மச்சி ஓபன் தி பாட்டில்' பாட்டிற்கும் இருவரும் நடனமாடினர்.

Sai Pallavi Yuvan Shankar Raja Dancing for Paiyaa Mankatha Songs BGM 2022

இது போக, சாய்பல்லவிக்காக 'யாரடி மோகினி' படத்திலிருந்து எங்கேயோ பார்த்த மயக்கம் பாட்டை யுவன் சங்கர் ராஜா பாடினார். பின்னர் சாய்பல்லவி தங்க பதக்கத்தை அணிந்து வீறு நடை போட்டார். பின்னர் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் அளித்தார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

Also Read | யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. இந்த பிரபல இளம் நடிகை தான் ஹீரோயினா? செம அப்டேட்

பையா, மங்காத்தா பாடல்களுக்கு சாய்பல்லவியுடன் டான்ஸ் ஆடிய யுவன் சங்கர் ராஜா.. செம்ம CUTE வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Yuvan Shankar Raja Dancing for Paiyaa Mankatha Songs BGM 2022

People looking for online information on Behindwoods Gold Medals 2022, BGM 2022, Sai Pallavi, Yuvan Shankar Raja will find this news story useful.