RRR Others USA
www.garudabazaar.com

“எல்லாத்தயும் சிரிச்சுட்டே எதிர்கொள்ள காரணம்....” அடடே.. பிறந்த நாளில் பிரசாந்த் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

Actor prashanth talked about his father in birthday function

”விஜய் பட வாய்ப்பு மட்டும் கெடச்சா…”… தமனின் கனவு நனவாயிடுச்சு - viral video!

வைகசாசி பொறந்தாச்சு to அந்தகன்…

தமிழ் சினிமாவில் 90களிலும் 2000களிலும் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து பாலு மகேந்திரா, மணி ரத்னம் மற்றும் ஷங்கர் என முன்னணி இயக்குனர்களின் படங்களில் வரிசையாக நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இப்போது தங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்துக்காக படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடிப்பில் அந்தகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அந்தாதூன் to அந்தகன்…

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் 'அந்தாதூன்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக். இந்த படத்தில் நடிகர் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Actor prashanth talked about his father in birthday function

படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் டப்பிங், பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணு கைப்பற்றியுள்ளார்.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள என் காதல் என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரசாந்த்…

இந்நிலையில் பிரசாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதில் கலந்துகொண்டு பேசிய பிரசாந்த் தனது தந்தை, தாய், சகோதரி, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நீண்ட பயணத்தில் ஏற்பட்ட சில கஷ்டங்களை சிரித்துக்கொண்டே எதிர்கொள்ள தனது தந்தையும் தாயாரும்தான் உதவினார்கள் என்று கூறினார்.  மேலும் ‘விரைவில் அந்தகன் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அதை ரசிகர்கள் பார்த்து ரசிப்பதை நான் பார்க்கப் போகிறேன்’ என நம்பிக்கையோடுக் கூறியுள்ளார்.

Actor prashanth talked about his father in birthday function

பிரசாந்தின் திருமம் எப்போது?

சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நேர்காணல் அளித்த பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பிரசாந்தின் திருமணம் குறித்து பேசி இருந்தார்.  அதில் ‘பிரசாந்துக்கு அந்தகனுக்குப் பிறகு அடுத்து உடனடியாக செய்யவேண்டியது அவரின் திருமணம்தான். அவருக்கு நிறைய படங்கள் பண்ணனும்’ எனக் கூறியுள்ளார்.  நடிகர் பிரசாந்துக்கு ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரோடு திருமணம் நடந்தது.  அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. ஆனால் அந்த தம்பதியினர் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Raja Rani 2: “எல்லாத்துக்கும் காரணம் அவருதான்”… உருகும் சந்தியா claps வாங்கிய சரவணன்!

Actor prashanth talked about his father in birthday function

People looking for online information on Birthday function, Prashanth, Prashanth talked about his father, Thiagarajan will find this news story useful.