Beast Others
www.garudabazaar.com

"பிரசாந்த் கிட்ட ஒரு பவர் இருந்துச்சு.. 'குருஜி' ஸ்பெஷல் சக்தி.." சினேகா போட்ட புதிர்.. 'Exclusive'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில், 90-களின் காலகட்டங்களில் இருந்தே முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் 'டாப் ஸ்டார்' பிரசாந்த்.

Sneha about prashanth secret power in shooting

தொடர்ந்து, தற்போது தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில், அந்தகன் என்னும் படத்தில் நாயகனாக பிரசாந்த் நடித்து வருகிறார்.

விரைவில் அந்தகன்..

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி இருந்த திரைப்படம் அந்தாதூன். இதனை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இதன் தமிழ் ரீமேக் தான் 'அந்தகன்'. இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கி வருகிறார்.

பிரசாந்த்துடன், இந்த படத்தில், கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த், கே.எஸ். ரவிக்குமார்,வனிதா உள்ளிட்ட பலர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில், இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் சில பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்திருந்தது.

இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் தம் பிறந்த நாளையொட்டி, தமது ரசிகர்களை சந்தித்த பிரத்தியேக நிகழ்வு பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் இணைய வழியில் தோன்றி நடிகைகள் பூர்ணா, மதுபாலா, சங்கவி பிரியாமணி உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து பிரசாந்த் பற்றி தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் முன்னிலையில் பிரசாந்த் மற்றும் சினேகா இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

பிரசாந்த் கிட்ட ஒரு பவர் இருக்கு..

அப்போது பிரசாந்த் பற்றி பேசிய நடிகை சினேகா, "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என்னுடைய முதல் படம் (விரும்புகிறேன்) பிரசாந்துடன் தான்.. ஒரு மிகப்பெரிய டாப் ஸ்டார் உடன் நடிக்கிறேன் என்கிற பயம், பதட்டம் முதலில் இருந்தது. ஆனால் அவர் மிகவும் இயல்பாக வந்து ஜாலியாக பேச தொடங்கினார். மிகவும் இனிமையானவர். தொடர்ந்து எங்களுடைய நட்பு பல ஆண்டுகாலம் இருந்து வருகிறது. அண்மையில் அவருடன் இணைந்து ஒரு தெலுங்கு திரைப்படம் பண்ணினோம். அதற்கென ஒரு ஊரில் அந்த சூட்டிங் நடந்தது, அப்போது மிகவும் டயர்டாக இருந்தது தினமும். ஆனால் பிரசாந்த் மற்றும் எப்போதும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த ஆப்பிள் போல் ஃபரஷ்ஷாக இருப்பார்.

எப்படி என்று அவரிடமே கேட்டேன். அவரும் குருஜி தனக்கு பவர் கொடுப்பதாக குறிப்பிட்டார். அப்படியா எனக்கும் அந்தப் அவரை பெற்றுத் தாருங்கள் என்று அடிக்கடி கேட்டேன். அவரும் நெற்றியில் கை வைத்து கண்களை மூடி யோசித்துவிட்டு இன்று பவர் கிடைக்கவில்லை, உங்களுக்கு என்று சொல்வார். சில வேளைகளில் எனக்கு அவருடைய கையை கொடுப்பார். இன்னொரு கையை வானத்தை நோக்கி காட்டுவார், அவருடைய விரல்களுக்குள் ஒரு ஒளி புகுந்து ஒரு பவர் கிடைக்கும்.. உண்மையில் உற்சாகமாகி விடுவோம்" என்று சினேகா கலகலப்பாக குறிப்பிட்டார்.

"பிரசாந்த் கிட்ட ஒரு பவர் இருந்துச்சு.. 'குருஜி' ஸ்பெஷல் சக்தி.." சினேகா போட்ட புதிர்.. 'EXCLUSIVE' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sneha about prashanth secret power in shooting

People looking for online information on Power, Prashanth, Shooting Spot, Sneha will find this news story useful.