சினேகா - பிரசன்னா ஜோடியின் புதிய தேவதை - தம்பதி வைத்த க்யூட் அன்ட் ஸ்வீட் பெயர் இதுதான்! Exclusive Video
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் பிரசன்னா - சினேகா ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வைத்த பெயர் குறித்து தெரிய வந்துள்ளது.
![actor prasanna reveals name of new born baby girl with sneha actor prasanna reveals name of new born baby girl with sneha](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-prasanna-reveals-name-of-new-born-baby-girl-with-sneha-news-1.jpg)
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரசன்னா. இவர் நடித்த அஞ்சாதே, நானயம், கண்ட நாள் முதல் உள்ளிட்ட படங்கள் பிரச்ன்னாவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தன. இவர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்கிற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சினேகா - பிரசன்னா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது.
இந்நிலையில் பிஹைன்ட்வுட்ஸ்க்காக பிரசன்னா அளித்த பேட்டியில் தனது மகளுக்கு சூட்டிய பெயரை பற்றி தெரிவித்துள்ளார். ஆத்யந்தா என தனது மகளுக்கு பெயர் வைத்திருப்பதாக பிரசன்னா கூறியுள்ளார். முடிவில்லாமல் கடைசி வரை நிலைத்திருப்பவது என்பதே இப்பெயருக்கான அர்த்தமாம். இது மட்டுமல்லாமல் கற்பமாக இருந்தபோது தனது மனைவி சினேகா எப்படி இருந்தார் எனவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சினேகா - பிரசன்னா ஜோடியின் புதிய தேவதை - தம்பதி வைத்த க்யூட் அன்ட் ஸ்வீட் பெயர் இதுதான்! EXCLUSIVE VIDEO வீடியோ