பிரகாஷ்ராஜ் தன் மகனுடன் செம க்யூட் வீடியோ.! அபியும் நானும் வாழ்க்கைதான் நிஜத்திலும் போல.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மகனுடன் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

பிரகாஷ் ராஜ் தன் மகனுடன் க்யூட் வீடியோ | actor prakash raj shares a cute video with his son

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருக்கும் நேரங்களை செலவிடுவதை பல நடிகர்கள் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மதிய நேரம், ஓய்வாக படுத்திருக்கும் பிரகாஷ்ராஜின் முதுகில் ஏறி அவரது மகன் மசாஜ் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதை பகிர்ந்துள்ள அவர், ''ஞாயிற்றுக்கிழமை மதியம், என் தோட்டத்தில்... எனது மகன் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறான். நான் சிறுவனாக இருந்த போது என் அப்பாவுக்கு செய்ததை இவன் எனக்கு செய்கிறான்'' என பதிவிட்டுள்ளார். அபியும் நானும் படத்தில் திரிஷாவிடம் பாச மழையை பொழிந்த பிரகாஷ்ராஜ், நிஜத்திலும் தன் மகனுடன் அப்படி ஜாலியாக பொழுதை கழிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Entertainment sub editor