தனுஷின் அசுரனில் கெஸ்ட் ரோலில் வரும் பிரபல நடிகரின் வேடம் குறித்து பேசிய வெற்றிமாறன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 29, 2019 12:19 PM
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், கென், பவன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இருந்து கத்திரிப் பூவழகி, பொல்லாத பூமி போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 28) ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் பேசிய வெற்றி மாறன், இந்த படத்தில் டிஜேனு ஒருத்தர் நடிச்சிருக்காரு. நடிகை ஆண்ட்ரியா தான் அவருடைய பாடல்களை காட்டுனாங்க. முதலில் அந்த வேடத்தில் தனுஷே நடிக்க வேண்டியது இருந்தது. பின்னர் டிஜே வந்து நடித்ததை பார்த்த பிறகு தனுஷ் அந்த வேடத்தில் நடித்திருந்தால் அது அந்த வாழ்க்கைக்கு சூழலுக்கு சரியாக பொருந்தியிருக்காதோ என்று தோன்றியது.
இந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படமே அந்த கதாப்பாத்திரத்தினுடைய பயணம் தான். ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து, வாழ்வில் கஷ்டங்களை கடந்து போகிறார் என்ற ஒரு பயணம் தான். அவருடைய மனைவி வேடம் ஒரு உணர்வுப்பூர்வமான வேடம். அதற்கு மஞ்சு வாரியர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் தான் சொன்னார்.
இந்த படத்துல ஒரு வேடம் பிரகாஷ் ராஜ் நடிச்சா நல்லா இருக்கும்னு நினச்சு கூப்டேன். அவர் அப்பா தேர்தல் வேலையில் பிஸியாக இருந்தார். நான் அழைத்ததும் சம்மதித்தார்.வக்கீல் வேடத்தில் நடிக்கனும்னு சொன்னேன். எப்போனு சொல்லுங்க உடனே வந்து பன்றேன் என்றார். அதே மாதிரியே 6 நாட்கள் நடித்தார். 6 நாட்களும் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற எந்த பிரச்சனையும் அவரிடம் இருந்ததில்லை என்றார்.
தனுஷின் அசுரனில் கெஸ்ட் ரோலில் வரும் பிரபல நடிகரின் வேடம் குறித்து பேசிய வெற்றிமாறன் வீடியோ