''எனது பிறந்தநாளில் இதைதான் செய்தேன்'' - வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்த ஹீரோ வேலை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பணியாட்களுக்கு உதவி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் - பிரகாஷ் ராஜ் உதவி | actor prakash raj helps his workers in corona lockdown

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், 'எனது பிறந்தநாளான இன்று, எனது தோட்டத்தில் வேலை செய்யும் 11 பேர்களுக்கு தங்க இடம் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். அவர்கள் சென்னை, பாண்டிச்சேரி, கம்பம் பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்திடம் பேசி, அவர்களுக்கு பணமும் அனுப்பி வைத்துள்ளேன். அவர்களது பாதுகாப்பையும் உறுதிபடுத்தியுள்ளேன். விரைவில் எங்களது லாக் டவுன் காலத்தை எப்படி செலவிடுகிறோம் என சொல்வேன். இது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. நம்முடையதும் கூட. முடிந்தால் ஒரு குடும்பத்தின் பொறுப்பையாவது ஏற்று கொள்ளுங்கள் என கேட்டு கொள்கிறேன். மனிதம் போற்றுவோம்'' என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor