"என் வீட்டை கொடுக்கிறேன்"... நடிகர் பார்த்திபன் 'அதிரடி' வீடியோ... வைரலாகும் செய்தி...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயினால் நடுங்கி வருகிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம் தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் ஒரு யோசனை சொல்லி இருக்கிறார். அதாவது " இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கணும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாக கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார். அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்" என்று கூறியுள்ளார்
"என் வீட்டை கொடுக்கிறேன்"... நடிகர் பார்த்திபன் 'அதிரடி' வீடியோ... வைரலாகும் செய்தி...! வீடியோ