God Bless you என்று நடிகர் நாகார்ஜுனாவை மனதார வாழ்த்திய பிரபல நடிகை! காரணம் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. கரோனா பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்து வரும் நிலையில் இந்தியாவில் இதன் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக உள்ளனர்.

Actor Nagarjuna donates 1 crore to Film workers

இந்நிலையில் திரைத்துறையைச் சார்ந்த பல ஊழியர்கள், துணை நடிகர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  வருமானம் இன்றி தவிக்கும் பெப்ஸி ஊழியர்களுக்காக நடிகர், நடிகைகள் உதவ முன் வர வேண்டும் என்று பெப்ஸி தலைவர் ஆர்.கே.செலவமணியின் கோரிக்கையை ஏற்று நடிகர்கள் பலர் உதவித் தொகை அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் நாகார்ஜுனா ரூபாய் 1 கோடி வழங்குவதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

நாகார்ஜுனாவை திரைத்துறையினர் பாராட்டி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி அவருடைய டிவிட்டர் லின்கில் God bless you Nag என்று வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டியுள்ளார்.

Entertainment sub editor