Kaateri logo top
www.garudabazaar.com

"Chef வெங்கடேஷ் பட் மேல செம கோவம்... அப்றம் தான்.." - 'CWC 3' முத்துகுமார் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில், மிக மிக பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

Actor muthukumar about chef venkatesh bhat in cwc 3

Also Read | "கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்.." குக் வித் கோமாளி ரசிகையின் நெகிழ வைத்த பதிவு..

இதன் மூன்றாவது சீசன், சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், நடிகை ஸ்ருதிகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் இரண்டாம் இடத்தையும், நடிகை அம்மு அபிராமி மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தனர். இது தவிர கிரேஸ், வித்யுலேகா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசன்களும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடந்த பல மாதமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் முடிவடைந்ததால், அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பை தற்போதே இதன் ரசிகர்கள் உருவாக்கி விட்டனர்.

அந்த வகையில், குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில், வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து தமிழக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகர் முத்துக்குமார். இவர் நடித்துள்ள படத்தில், மிகவும் மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழச்சியின் ஆரம்பத்திலும், கோமாளிகள் மத்தியில் சற்று பயங்கரமான ஒருவராக தான் காணப்பட்டார்.

Actor muthukumar about chef venkatesh bhat in cwc 3

ஆனால், நாட்கள் செல்ல செல்ல, முத்துக்குமாரின் குழந்தை மனது வெளியே தெரிய ஆரம்பித்து, நிகழ்ச்சி முடியும் போது, ஜாலியான ஒரு மனிதர் ஆகவும் வெளியே அறியப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் Behindwoods சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில், செஃப் வெங்கடேஷ் பட் பற்றி முத்துக்குமார் தெரிவித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்ட முத்துக்குமார், நிகழ்ச்சியின் நடுவர் செஃப் வெங்கடேஷ் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். "பட் மேல் முதலில் அதிக கோபம் இருந்தது. பரத் மீது கரண்டியை எடுத்து வேகமாக அடித்தார். இவர் ஏன் இப்படி அடிக்கிறார் என்று தான் எனக்கு தோன்றியது. எனக்கு எதுவுமே தெரியாமல் என்னுடைய முதல் நாள் நடந்த சம்பவம் இது.

Actor muthukumar about chef venkatesh bhat in cwc 3

அதன் பின்னர், அவருடன் உரையாடும் போது தான், பரத்தும் சும்மா இல்லாமல் அவரை கூப்பிட்டு கிண்டல் பண்ணுவது தெரிந்தது. உதாரணத்திற்கு உணவை தயார் செய்த பிறகு, பட்டை அழைத்து, 'பாத்துக் கத்துக்கோ பட்டுக்குட்டி' என பரத் விளையாட்டாக கிண்டல் செய்தார். அவர் எவ்வளவு பெரிய செஃப். அவரை இப்படி கிண்டல் செய்தால், என்ன செய்ய? " என முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

Actor muthukumar about chef venkatesh bhat in cwc 3

முன்னதாக வெங்கடேஷ் பட் இதுகுறித்து கூறிய போது, “இங்கு எல்லாமே ஃப்ரண்ட்லியாக ஜாலியாக டிவி நிகழ்ச்சிக்காக நடப்பதுதான். அது எதுவுமே நிஜமான அடி கிடையாது. நாங்கள் ஃப்ன்னுக்காக ஃபன்னாகவே அப்படி நடந்துகொண்டோம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துக்குமார் பேசிய முழு நேர்காணல் வீடியோவை இணைப்பில் காணலாம்:

Also Read | அட.. புதிய படத்தில் இணையுறாங்கப்பா நம்ம ‘அசுரன்’ அம்மு & ‘குக் வித் கோமாளி’ புகழ்.!

"CHEF வெங்கடேஷ் பட் மேல செம கோவம்... அப்றம் தான்.." - 'CWC 3' முத்துகுமார் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor muthukumar about chef venkatesh bhat in cwc 3

People looking for online information on Chef Venkatesh Bhatt, CWC 3, CWC 3 muthukumar, Muthukumar will find this news story useful.