'மாஸ்டர்' ரிலீஸ் தாமதம்.... - ரசிகரின் கமெண்டிற்கு பிரபல ஹீரோ பதிலடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' இன்று (ஏப்ரல் 9) வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பட வெளியீடு தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த படம் விரைவில் வெளியாகும் என புது போஸ்டர் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Actor Krishna replies to fan about Thalapathy Vijay, VIjay Sethupathi's Master | தளபதி விஜய்யின் மாஸ்டர் குறித்து கிருஷ்ணா ட்வீட்

இதுகுறித்து ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்டர் எப்போ வந்தாலும் மாஸ்டர் தான். காத்திருப்பதுலயும் ஒரு திரில் இருக்கே.

அப்புறம் மாஸ்டருக்கு நம்ம வெய்ட் பண்றது தான மரியாதை'' என்று தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் 'இது ரொம்ப முக்கியமா இப்போ ?' என்று கமெண்ட் செய்ய, பாஸிட்டிவா இருங்க கார்த்தி புரோ தப்பே இல்ல'' என்று தெரிவித்தார்

Entertainment sub editor