www.garudabazaar.com

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணியின் ப்ரொபோஸ் தருணம்.. வெளியான Unseen புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி தம்பதியின் ப்ரொபோஸ் மற்றும் சுற்றுலா UNSEEN புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Actor Adhi and Nikki Galrani Propose Moment Unseen Pictures

நடிகர் ஆதி பினிசெட்டி, தமிழில் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. கடைசியாக இவர் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

அதே போல் நடிகை நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். பின்னர், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர். இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தனர். அதன்படி, கடந்த மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது. அதைத் தொடர்ந்து, நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் கடந்த மே மாதம் (19.05.2022) கோலாகலமாக நடைபெற்றது. 

சில மாதங்களுக்கு முன் தம்பதியர் தங்களது திருமணத்தின் 100வது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கொண்டாடினர். அப்போது நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக சிலர் பேசிவந்தனர். இதனை நிக்கி கல்ராணி பின்னர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் ஆதி நிக்கி கல்ராணிக்கு ப்ரொபோஸ் செய்த தருணம் மற்றும் இவரும் டூர் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட UNSEEN புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Adhi and Nikki Galrani Propose Moment Unseen Pictures

People looking for online information on Adhi, Nikki Galrani, Pics will find this news story useful.