Reliable Software
www.garudabazaar.com

"சுல்தானுக்கு மார்க் போட யாரும் வராதீங்க.. ரொம்ப risk எடுத்து"... நடிகர் கார்த்தி அதிரடி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. மாஸ் மற்றும் தரமான கதையம்சம் உள்ள படங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த படம் 'ரெமோ'. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.  முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரபலங்களை ஒன்று சேர்த்து அந்த படத்தை முடித்து காட்டினார்.

actor karthi about sultan film சுல்தான் பற்றி கார்த்தி அதிரடி

எனவே இதனை அடுத்து தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தீபாவளி பரிசாக சுல்தான் படக்குழுவினர் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டிருந்தனர். அதில் பாவாடை தாவணியில் ராஷ்மிகவுடன், கார்த்தி அமர்ந்திருக்கும் இந்த போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே, சுல்தான் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. பக்காவான ஆக்‌ஷன் காட்சிகள், மிரட்டும் வில்லன்கள் என தெறி கமர்ஷியல் திரைப்படமாக சுல்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சுல்தான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுல்தான் படம் பற்றி பேசிய நடிகர் கார்த்தி "இது மூன்று வருட உழைப்பு. பொறுமையாக படத்தை தற்போது ரிலீஸ் செய்து உள்ளோம். தயவு செய்து யாரும் மார்க் போட வராதீர்கள். குடும்பத்துடன் பாதுகாப்பு அணிகளுடன் வந்து படத்தை தியேட்டர்களில் மக்கள் ரசிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

"சுல்தானுக்கு மார்க் போட யாரும் வராதீங்க.. ரொம்ப RISK எடுத்து"... நடிகர் கார்த்தி அதிரடி..! வீடியோ

Tags : Sultan, Karthi

தொடர்புடைய இணைப்புகள்

actor karthi about sultan film சுல்தான் பற்றி கார்த்தி அதிரடி

People looking for online information on Karthi, Sultan will find this news story useful.